Wednesday, 25 January 2023

எனக்கு டேபிள் வொர்க் செய்வதை விட கள ஆய்வு செய்வது சுலபம் - கரசூர் பத்மபாரதி நேர்காணல்

கரசூர் பத்மபாரதி, தமிழின் முக்கியமான மானுடவியல் ஆய்வாளர். வெளிஉலகுடன் அதிகம் கலக்காத மூடுண்ட சமூகங்களான  திருநங்கைகள் குறித்தும்,  நரிக்குறவர்கள் குறித்தும் ஆய்வுநூல்கள் வெளியிட்டிருக்கிறார். புதிதாக மானுடவியல் ஆய்வு செய்யும் யாரும் முன்மாதிரியாக கொள்ளவேண்டிய ஆய்வுப்பணிகள் இவை என்று நாட்டார் ஆய்வாளர் அ.கா. பெருமாள் கூறுகிறார். அவ்வளவு விரிவாகவும், நுட்பமாகவும் களஆய்வு மேற்கொள்வதுதான் பத்மபாரதியின் சிறப்பு.  கரசூர்,  ஒரு சிறு கிராமம், திருச்சிற்றம்பலத்துக்கு அருகே உள்ளது. பத்மபாரதியால் தான் அது இன்று அறியப்படுகிறது. கரசூரில் பத்மபாரதியை சந்தித்த நண்பர் கடலூர் சீனு செய்த நேர்காணல். 

ஆடல் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி

"உலகம் யாவையும் தன் உடலாகக் கொண்டவனை, 
கேட்பதனைத்தும் மொழியாக ஈந்தவனை, 
நிலவையும் உடுக்களையும் அணிகளாக்கி நிற்கும், 
நாம் வணங்கும் தூய அறிவே ஆனவனுக்கு,
மங்களம் மங்களம் மங்களம் "
                                                                - நடராஜர் தியான ஸ்லோகம் 

பக்தியில் பூனையும் குரங்கும் - அனங்கன்

சோழர்காலத்தில் தொடங்கி அவர்கள் காலத்திலேயே வலுவடைந்த பிரிவினை வலங்கை, இடங்கை பிரிவினை. அதே போல் ராமானுஜர் தொகுத்தளித்த  ஶ்ரீவைணவ மரபினுள் தென்கலை, வடகலை பிரிவு நெடுங்காலமாக நீடித்து இன்றுவரை வந்துள்ளது. இந்த பிரிவினை பொது பார்வையில் ஜாதி வேற்றுமையாகவும், கோயில் அதிகாரத்திற்கான சண்டையாகத் தெரிந்தாலும் இந்த இருபிரிவினருக்கும்  வைணவ தத்துவ அடிப்படியில் சில மாறுபாடுகள் உள்ளன.

Saturday, 21 January 2023

எருதின் தடம் : திருப்பருத்திக்குன்றம் - அனங்கன்

பொ.யு. 640-ஆம் ஆண்டு புத்த சமய நூல்களை சேகரிக்க யுவான் சுவாங் இந்தியா வந்தார். இந்தியாவில் பல இடங்களுக்கு பயணித்து அவற்றை  குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். அவர் காஞ்சிபுரம் வந்தபோது நூறு புத்த மடாலயங்கள் இருந்தது எனவும், காஞ்சியில் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்களில் பெரும்பாலானவை திகம்பர சமணக்கோயில்கள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த எண்ணிக்கை உத்தேசமானதாக கூட இருக்கலாம். ஆலயங்கள் என்று சொல்வது மடாலயங்களாகவும் இருக்கலாம். இந்தக் குறிப்புகள் சுட்டுவது போல் 7-ஆம் நூற்றாண்டில் புத்த, சமணர்கள் தென்னகங்களில் நிறைந்திருந்தனர் என்பது உண்மையையே.

அறிவியல் என்றால் என்ன? - சமீர் ஒகாஸா

அறிவியல் என்றால் என்ன? பதில் சொல்வதற்கு இது எளிய கேள்வியாக தோன்றலாம். ஏனென்றால் இன்று அனைவருக்கும் இயற்பியல், வேதியியல், விலங்கியல் போன்றவை அறிவியல் துறைகள் என தெரியும். அதேசமயம் இசை, கலை, இறையியல் போன்றவை அறிவியல் துறைகளுக்குள் வராது என்றும் தெரியும். ஆனால் தத்துவவாதியாக இருந்து கொண்டு அறிவியல் என்றால் என்ன என்ற கேள்விக்கு நாம் இது போன்ற ஒரு பதிலை எதிர்பார்க்கமாட்டோம். இங்கு நாம் பொதுவாக அறிவியல் என சொல்லப்படும் செயல்பாடுகளின் பட்டியலை கேட்கவில்லை. நாம் கேட்பது இந்த பட்டியலிலுள்ள அனைத்திற்கும் பொதுவாக என்ன அம்சம் உள்ளது? எது அவற்றை அறிவியலாக ஆக்குகிறது? என்பது. இதைப் புரிந்து கொண்டால் நம்முடைய கேள்வி அவ்வளவு எளிமையானதல்ல என்பது தெரியும். 

நிகோலஸ் கோபெர்நிகஸ்