சு. தியடோர் பாஸ்கரன் தமிழின் முன்னோடி சூழலியல் ஆளுமை. தமிழில் சூழலியலை முதன்மைப்படுத்தி எழுதியவர். சூழலியலுக்கான சொற்றொடர்களை உருவாக்கியவர். சினிமாவின் மீது பண்பாட்டு நோக்கில் ஆய்வுகள் செய்திருக்கிறார். நாடகங்களை பற்றியும் ஆய்வுகள் செய்திருக்கிறார். தன்னுடைய இளமை முதல் வரலாற்றில் ஆர்வமுடைய பாஸ்கரன், பிரபல ஆங்கில பத்திரிக்கைகளில் வரலாற்றுக் கட்டுரைகளை 1967 முதல் தொடர்ந்து எழுதி வருகிறார்.
Sunday, 5 March 2023
பாஸ்கரனும் தமிழும் - ஐ. ஜோப் தாமஸ்
நானும் பாஸ்கரனும் 1955-ல் பாளையங்கோட்டை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் மாணவர்களாக இருந்தது முதலே நண்பர்களாக இருந்து வருகிறோம். அதன் பிறகும் 1957-60யில் மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியில் எங்கள் நட்பு தொடர்ந்தது. பட்டபடிப்பிற்கு பிறகு அவருக்கு மெட்ராஸ் ஆவணக் காப்பகத்திலும் எனக்கு அரசு அருங்காட்சியகத்திலும் வேலை அமைந்தது, இரண்டுமே எக்மோரில் இருந்தது. நாங்கள் அப்போது அர்மீனியன் வீதியில் உள்ள கத்தோலிக்க மையத்தில் தங்கியிருந்துகொண்டு வாரயிறுதிகளில் உபரி வருமானத்தின் பொருட்டு தி ஹிந்து மற்றும் தி மெயில் பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள் அனுப்புவதற்காக பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சி செய்வோம்.
ஜோப் தாமஸும் பாஸ்கரனும். வாஷிங்டன் அருங்காட்சியகத்தில் |
இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழ் முகங்கள் - தியடோர் பாஸ்கரன்
சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பாற்றிய தமிழ் சுதந்திரப் போராட்ட வீரர்களை முறையாக ஆவணப்படுத்துவதில் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. அக்காலகட்டத்தின் ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணத்தில் தனது இளமையை கழித்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவி பொதுச் செயலாளர் ஆர்.எஸ். ரெட்டி (1940-2020) ஒருமுறை கூறுகையில் "அறியப்படாத இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்வதும் ஆவணப்படுத்துவதும் நேரத்தை பயனுள்ளதாக செலவிடுவதற்கான சிறந்த வழிகள்" என்றார்.
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே - லோகமாதேவி
பல வருடங்களுக்கு முன்பு பாரதியார் பல்கலைக்கழகத்தின் மாபெரும் நூலகத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் ஆங்கிலக் கட்டுரை ஒன்றை முதன் முதலில் வாசித்தேன். கட்டுரையின் உள்ளடக்கம் இப்போது நினைவிலில்லை, திரைப்பட வரலாறு குறித்ததென்று தேசலாக நினைவு. ஆனால் அவரது அபாரமான மொழிநடையும் உன்னத ஆங்கிலமும் மனதில் பதிந்துவிட்டது.
சிவதாண்டவம்: ஓர் அஞ்சலி - தியடோர் பாஸ்கரன் (முதல் கட்டுரை)
இந்தியக் கலைகளின் நோக்கங்களை இந்தியருக்கும் சேர்த்து இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகத்துக்குப் புலப்படுத்தியவர் ஆனந்த குமாரசாவாமி. அவரின் நூற்றாண்டு நினைவை ஒட்டி சிதானந்த தாஸ் குப்தா 1968-ல் தயாரித்த படம் ’Dance of Siva: A Tribute to Ananda coomaraswamy’. இதை அமெரிக்க தகவல் நிலையம் அண்மையில் (1975) திரையிட்டது.
கல் மேல் நடந்த எழுத்து - அனங்கன்
தஞ்சை கும்பகோணம் பகுதிக்கு கடந்த வருடம் பயணம் செய்திருந்தேன். சோழர்கள் எடுப்பித்த பெரும் கோவில்கள் முதல் கட்டிட கலையின் துள்ளியங்கள் என சொல்லத்தக சிற்றாலயங்கள் வரை சென்று பார்த்தேன். இந்த வருடம் அவ்வாறு பயணம் சென்று புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மதுரையை சுற்றிய குன்றுகளில் இருக்கும் சமணச் சின்னங்களை பார்த்து விட்டு வந்தேன். அதற்கான பயணத் தயாரிப்பில் நூல்களை படித்தும் புரட்டிப்பார்ப்பதும் இணையத்தில் தகவல் சேகரித்து பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்வது வழக்கம்.