Monday, 25 November 2024

ஒரு முதன்மைத்தரவு உங்கள் வாழ்க்கை முழுவதற்குமான செயல்களத்தை வழங்குகிறது- உதயசங்கர் நேர்காணல்

உதயசங்கர்

தொல்லியலை இணையம் வழியாக அனைவருக்கும் கொண்டுசெல்லும்  தன்னார்வலர் உதயசங்கர். தனது இணையதளத்தின் மூலம் தமிழ் கல்வெட்டுகளை அனைவரும் ஒரே இடத்தில் படிக்கும்  வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார். பயனர் தனக்குத் தேவையான கல்வெட்டுகளை அரசு, நிலவியல், செய்தி போன்றவற்றின் அடிப்படையில் எளிதாக தேடி எடுக்கும்படி 8500 கல்வெட்டுக்களுக்கான தேடுபொறியை இணையத்தில் பொதுப்பயன்பாட்டுக்கு செய்தளித்துள்ளார். கல்வெட்டுகளை எளிதாக புரிந்துகொள்ள கல்வெட்டு அகராதி, சொற்களஞ்சியம் , கல்வெட்டு காலவரிசை ஆகியவையும் அவரது வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

உதயசங்கரின் சொந்த ஊர் மதுரை. இயந்திரவியல் (Mechanical Engineering) படித்தவர், தற்போது சென்னையில் ஆர்க்கிடெக்சுரல் 3D ரெண்டரிங் அண்ட் எஸ்டிமேஷன் (கட்டிட முப்பரிமாண உருவாக்கம் மற்றும் மதிப்பீடு) பணி புரிகிறார்.

தொன்மங்களின் ஆற்றல் - 1: ஜோசப் கேம்ப்பெல்

நூல் அறிமுகம்

ஜோசப் கேம்ப்பெல் அவர்களின் 'தொன்மங்களின் ஆற்றல்' (Power of Myth) எனும் இந்நூல் ஒரு அமெரிக்க தொலைக்காட்சி தொடருக்கான காணொளிப்பதிவின் நேரடியான எழுத்து வடிவம். நூலின் ஆசிரியரான ஜோசப் கேம்ப்பெலிடம் தொலைக்காட்சி நிருபர் பில் மோயர் தொன்மங்கள் குறித்து கேட்கும் கேள்விகளாலும் அதற்கு கேம்ப்பெல் அளிக்கும் பதில்களாலும் ஆன இந்த உரையாடல்கள் 1985-86 ஆம் ஆண்டில் பல அமர்வுகளாக நிகழ்த்தப்பட்டது. 24 மணி நேரம் நீளும் இக்காணொளிப்பதிவு ஆறு மணி நேரமாக சுருக்கப்பட்டு தொலைக்காட்சித் தொடராகவும் நூலாகவும் வெளிவந்தது.

ஆடல் 8, செவ்வேள் ஆடல்: கம்பப்பாடல்கள் - 2, தாமரைக்கண்ணன் புதுச்சேரி


நெட்டப்பாக்கம் சூரபத்மன்

ஆடல்- கம்பப்பாடல்கள் பகுதி- 1


1.3 சூரசம்காரம் : முத்தியால்பேட்டை

திக்காய கரமலர்கள் எட்டோடு நிலவுமொரு
சித்தேசன் நுதல்விழியில் வருசிறிய பாலனோ

சிற்றாடை யணியுமயில் ஒத்தாடும் இமயமகள்
செப்பாடு முலையில்வரும் அமுத நிகர் வாயனோ

திட்டாண்மை யொடுபகைமை உற்றாரும் உயஅருள்தி
திக்காரன் அமரரெதிர் புகழுமுதல் வீரனோ....

..முட்போலும் எயிறுறுப ணிச்சேனை அடுசிகியில்
மொய்த்தோகை நிழலில்உல கினைவளையும் வேலனோ 

முத்தீனும் வளைபலதெ ருத்தோறும் நனியுலவு
முத்தாலு நகரில்வளர் குமரகுரு நாதனே

  • முத்தியாலுப்பேட்டை முருகப்பெருமான் மீது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய குமருகுருநாதன் திருவகுப்பு 

இந்தியக் கவிதையியல் - 2: பரதரின் நாட்டிய சாத்திரம், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

 பகுதி - I: இலக்கண வளர்ச்சி

அத்யாயம் - 2: பரதரின் நாட்டிய சாத்திரம்

கவிதை இலக்கணமும் நாடக இலக்கணமும் சிறிது காலம் தனித்து, வெவ்வேறு வடிவங்களில் வளர்ந்த பிறகு சந்தித்துக் கொண்டதாக முன்பே கூறியிருக்கிறோம். இந்த இரண்டிலும் தொன்மையானது நாடக இலக்கணம். நடனச்செயல்பாடு சிக்கலானது என்பதால், அது இலக்கணவாதிகளின் கவனத்தை முதலாவதாக கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. பாணினியின் காலகட்டத்திலேயே [கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு] ‘சிலாலி’, ‘க்ருஸஸ்வர்’ ஆகியவர்களின் நாட்டிய சூத்திரம் புழக்கத்தில் இருந்திருக்கிறது. *1

முதல்வினா- அனங்கன்


இந்தியர்களாகிய நம்மில் ‘வேதம்’ என்ற சொல்லை கேள்விப்படாதவர்கள் மிகச் சிறிய அளவில் தான் இருப்பார்கள். நேர்நிலையாகவோ எதிர்நிலையாகவோ வேதம் என்பதை அறிகிறவர்கள் எவ்வளவு பேர் அதை மேலும் அறிய முற்பட்டிருப்பார்கள்  என்று தெரியாது. சொற்பொழிவுகள் அறைகுறை தத்துவ நூல்கள் மூலம் அறிபவர்கள்  வேதங்கள் முக்திக்கான வழிமுறை மற்றும்  நல்லொழுக்கங்கள் ஆகியவற்றால் ஆனது என்று நினைக்கிறார்கள். ஒருமுறை எனது நண்பர் வேதத்தில் முக்தியை பற்றி என்ன சொல்லிருக்கிறது என்று கேட்டார்.  வேதங்கள் {முக்தி} விடுதலையைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று சொன்னேன். அவரால் அதை நம்பமுடியவில்லை. நீங்கள் இன்னும் ஆழ்ந்து வாசித்துப்பாருங்கள் எங்காவது சொல்லப்பட்டிருக்கும். வேதத்தில் சொல்லப்படாத கருத்து எவ்வாறு இத்தனை பெரிய அளவில் வளர்ந்திருக்க முடியும் என்று வாதிட்டார். இதே எண்ணம் பலருக்கும் இருக்கலாம் ஆனால் வேதம் சொல்வது அவற்றை அல்ல.

Violins With Wings - Rahul Tharun

Cicada

Violins With Wings


Cicadas are essentially violins with wings. A significantly large portion of their body is empty, which serve as amplifiers to the sound produced by specialized membranes called ‘Tymbals’. The sound is produced by the males of the species to attract females for mating. Each species has a unique song that attracts the females of the same species only, which is an intriguing fact, considering there are more than 3000 species of cicadas. Cicadas are of the super-family Cicadoidea and are physically distinguished by their stout bodies, broad heads, clear-membrane wings and large compound eyes.

பௌத்த வினாவல் - 5, ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

 பௌத்தத்தின் எழுச்சியும் பரவலும்

அசோகர் புத்த ஸ்தூபத்தை வழிபடச்செல்லுதல்

277. பெருவாரியான மக்கள் பின்பற்றும் மற்ற மதங்களை ஒப்பிடும் போது பௌத்ததை பின்பற்றும் மக்கள் எவ்வளவு இருப்பர்?


புத்த தர்மத்தை பின்பற்றுவோரின் எண்ணிக்கை வேறெந்த மதங்களை பின்பற்றுவோரையும்விட மிகுதிதான்.


278. எவ்வளவு மக்கள் பின்பற்றுகின்றனர் என்ற எண்ணிக்கையை கூறமுடியுமா?


சுமார் ஐந்நூறு கோடி. இது உலக மக்கள் தொகையில் 5:13 என்ற விகிதத்தில் உள்ளது. அல்லது உலக மக்கள் தொகையில் சரிபாதி அளவிற்கு குறைவாக உள்ளது.